📜 இன்றைய திருக்குறள்
திருவள்ளுவர் அருளிய அறநூல்
குறள் #50
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவ தெவன்
பொருள்: அறவழியில் இல்வாழ்க்கை நடத்தினால் போதும். துறவு வாழ்க்கையால் கிடைப்பது என்ன?
🔮 மேலும் சில குறள்கள்
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
தூய அறிவு வடிவான இறைவனின் திருவடிகளை தொழாவிட்டால் கற்ற கல்வியால் என்ன பயன்?
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
மலர் போன்ற மனத்தில் எழுந்தருளும் இறைவனின் சிறந்த திருவடிகளை சேர்ந்தவர்கள் இவ்வுலகில் நீண்ட காலம் வாழ்வார்கள்.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
இல்வாழ்க்கை அன்பும் அறமும் உடையதாக இருந்தால், அதுவே அதன் பண்பும் பயனும் ஆகும்.
இலமென்று அசைஇ இருப்பாரை காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்
ஏதும் இல்லை என்று சோம்பலாக இருப்பவரைக் கண்டால், நிலமகள் சிரிப்பாள்.