📜 இன்றைய திருக்குறள்
திருவள்ளுவர் அருளிய அறநூல்
குறள் #3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
பொருள்: மலர் போன்ற மனத்தில் எழுந்தருளும் இறைவனின் சிறந்த திருவடிகளை சேர்ந்தவர்கள் இவ்வுலகில் நீண்ட காலம் வாழ்வார்கள்.
🔮 மேலும் சில குறள்கள்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
எழுத்துக்கள் அனைத்திற்கும் அகரம் முதன்மையானது போல், உலகிற்கு இறைவன் முதன்மையானவர்.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
கற்க வேண்டியவற்றை குற்றமறக் கற்க வேண்டும். கற்றபின் அதன்படி நடக்க வேண்டும்.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்
அன்பிற்கு பூட்டுப்போடும் தாழ் உண்டா? அன்புள்ளவர்கள் சிந்தும் கண்ணீரே அன்பின் வெளிப்பாடு ஆகும்.
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவ தெவன்
அறவழியில் இல்வாழ்க்கை நடத்தினால் போதும். துறவு வாழ்க்கையால் கிடைப்பது என்ன?
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து
உழவர்களே உலகத்தாருக்கு ஆணி (அச்சு). உழாமல் வேறு தொழில் செய்வோரை எல்லாம் தாங்கி நிற்கின்றனர்.
